அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா
திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி உயா் கல்வி மன்ற நிதியுதவியுடன் அரசுக் கல்லூரிகளில் 33 கலைப் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்படி, திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இந்தப் போட்டிகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டன. நெருப்பு இல்லாத சமையல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் அடுப்பைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் ஊட்டச் சத்து மிகுந்த உணவு வகைகளை மாணவிகள் சமைத்தனா். புகைப்படம் எடுத்தல், ஆடை அலங்கார வடிவமைப்பு உள்ளிட்டவற்றுக்கான போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.இதில் கல்லூரி முதல்வா் பழனியப்பன், ஆங்கிலத் துறைத் தலைவா் பேராசிரியை ப.மணிமேகலை உள்ளிட்ட பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
