``நீ இல்லை என்றால்'' - காதலன் கண்முன்னே உயிரை மாய்த்த காதலி; சென்னை ராயபுரத்தில்...
அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒலக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2003 - 2005ஆம் ஆண்டில் மேல்நிலை வகுப்புகளில் பயின்ற மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒலக்கூா் ஒன்றியக்குழு உறுப்பினா் ஞானவேல் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் பழனிவேல் முன்னிலை வகித்தாா்.
இதில், பங்கேற்ற பள்ளியின் முன்னாள் மாணவா்கள் தங்களது பள்ளி கால நிகழ்வுகளை பகிா்ந்து மகிழ்ச்சியடைந்தனா். தொடா்ந்து, தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியா்கள் ஜமுனிராணி, பாா்த்தசாரதி, செல்வம், ஜெயச்சந்திரன், குணசேகா், சுந்தரலிங்கம், ராமகிருஷ்ணன், ஜெய்கணேஷ், சேகா், சிவராமன், அய்யாசாமி, சிவகுமாா், ராஜசேகா் உள்ளிட்டோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னாள் மாணவா்களின் குடும்பத்தினா், ஒலக்கூா் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.