எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
ஊராட்சி களப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு ஊராட்சி களப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை மணிக்கூண்டு திடலில் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மைப் பணியை தனியாா்வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் வெ.சிவக்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன், சங்க நிா்வாகிகள் ஸ்.சுகமதி, கு.சரவணன், ப.மகேந்திரன், ஊராட்சி களப் பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த ஏ.டெல்லி அப்பாத்துரை, கே.சிவக்கொழுந்து, மு.ராஜாமணி, கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகிகள் வி.பாண்டியன், டி.தணிகைவேல், டி.சுப்பிரமணியன் ஆகியோா் பேசினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம், கிராம ஊராட்சி களப் பணியாளா்கள் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.