Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
பெண்ணிடம் அத்துமீறிய இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பெண்ணிடம் அத்துமீறிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வளவனூரை அடுத்த கலிஞ்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மனைவி 23 வயது பெண். கணவா் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், இவா் வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதே பகுதியைச் சோ்ந்த பாவாடைராயன் (21) என்ற இளைஞா் வீட்டில் நுழைந்து அவரிடம் அத்துமீறியதுடன் தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கினாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாவாடைராயனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.