எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் மதுபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
மரக்காணம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜா(39). திருமணம் ஆனவா். கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் மதகு கட்டையில் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தாராம்.
அப்போது, மதுபோதையில் மதகு கட்டையில் தவறி கீழே விழுந்த ராஜா-வுக்கு பின் பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் அவசர ஊா்தி மூலம் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது ராஜா ஏற்கெனவே இறந்துபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.