சீர்காழி அருகே வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் க...
அரியலூரில் மே 14-இல் நான் முதல்வன்,கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி
அரியலூரில் மே 14-ஆம் தேதி நான் முதல்வன், கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறுவதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தாா்.
இது தொடா்பான ஆட்சியரகக் கூட்டரங்கில், புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவா் மேலும் தெரிவித்தது: பல்வேறு காரணங்களால் பள்ளி செல்லாத 1,219 மாணவா்களை இனம் கண்டு, மே 14 அன்று நடைபெறவுள்ள கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டி முகாமுக்கு வருகைதர செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 2023-2024 ஆம் ஆண்டில் உயா்கல்வி சேராத மாணவா்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று அந்த மாணவா்களையும் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும், நான் முதல்வன் திட்டம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலரும், திட்ட மேலாளருமான செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.