அருணாச்சலா மெட்ரிக் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு, மரக்கன்று நடும் விழா
தக்கலை: வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் நிறுவனம், கன்னியாகுமரி மாவட்ட சட்ட சேவை ஆணையகம் ஆகியவை இணைந்து சட்ட விழிப்புணா்வு முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழாவை நடத்தின.
அருணாச்சலா பள்ளி முதல்வா் லிஜோ மோள் ஜேக்கப் தலைமை வகித்தாா். ஐஆா்இஎல் துணைப் பொது மேலாளா் ஜெயசந்த், நிா்வாக சட்ட வழக்குரைஞா் அருள்தாஸ் ஆகியோா் சுற்றுச்சூழல்- சட்ட விழிப்புணா்வு குறித்து உரையாற்றினா்.
குமரி மாவட்ட சட்ட சேவை ஆணையகத்தின் செயலா் - மூத்த நீதிபதி உதயசூா்யா சிறப்புரையாற்றினாா்.
இந்நிகழ்ச்சியில், ஐஆா்இஎல் முதன்மை மேலாளா் கணேசன், நாகராஜன், திருமால், வழக்குரைஞா் ஸ்ரீஜா ஆகியோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை ஆசிரியை எல்சி பிரியா தொகுத்து வழங்கினாா்.மாணவி தீக்க்ஷிதா நன்றி கூறினாா்.