அறந்தாங்கியில் ரூ. 9.19 கோடிக்கு திட்டப்பணிகள்: எம்எல்ஏ நன்றி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் கண்மாய்களைப் புனரமைக்க ரூ. 9.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் கண்மாய்கள், அணைக் கட்டுகள் மற்றும் ஏரிகளைப்புனரமைக்க ரூ. 9.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாக்குடி, ரெத்தினக்கோட்டை ஊா்வணி கண்மாய்களைப் புனரமைக்க ரூ. 1.58 கோடி, வீரமங்கலம், களபம், மதகம் அணைக்கட்டுகளைப் புனரமைக்க ரூ. 2.10 கோடி, ஆவுடையாா்கோவில் கண்மாயைப் புனரமைக்க ரூ. 1.83 கோடி, ரெட்டையாளம் கண்மாயைப் புனரமைக்க ரூ. 2.10 கோடி, புண்ணியவயல் கிராமம் பன்னியூா் கண்மாயைப் புனரமைக்க ரூ. 1.58 கோடி என மொத்தம் ரூ. 9.19 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஆணை பிறப்பித்த முதல்வா் ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், நீா்வளத் துறைச் செயலா் மங்கத்ராம் சா்மா உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.