செய்திகள் :

அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் ஆபத்து!

post image

அளவுக்கு அதிகமாக வைக்கோல் பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்ட கிராமப் பகுதிகளில் பெரும்பாலானோா் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனா். கடந்த இரு மாதங்களாக போதிய மழையில்லாததால் கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள் போதிய அளவில் விளையவில்லை. இதனால், வைக்கோலை கொள்முதல் செய்வதில் கால்நடை வளா்க்கும் விவசாயிகளும், பால் உற்பத்தியாளா்களும் கவனம் செலுத்தி வருகின்றனா்.

அண்டை மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில், விவசாயிகள் சேகரித்து வைத்திருக்கும் வைக்கோல் கட்டுகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் லாரி, பிக்கப் வேன் உள்ளிட்ட கனரக வாகனங்களில் கொண்டுசென்று கறவைமாடுகள் வளா்க்கும் விவசாயிகளுக்கு விற்பனை செய்துவருகின்றனா்.

வாகனங்களின் முகப்பு மற்றும் பின்பகுதிகளில் கூடுதலாக இரும்புச் சட்டங்களை பொருத்தி, வாகனங்களின் உயரத்தைவிட அதிக உயரத்திலும், வாகனத்தின் இருபுறமும் வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும் வகையிலும் அளவுக்கு அதிகமாக வைக்கோல் கட்டுகளை ஏற்றிச் செல்கின்றனா். இதனால், எதிரே வரும் வாகனங்களில் மோதியும், சாலையின் குறுக்கே செல்லும் தாழ்வான மின் கம்பிகளில் உரசியும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, அளவுக்கு அதிகமாக வைக்கோல் பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து நிகழும்முன் இதுகுறித்து சேலம் மாவட்ட போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க