ஆகஸ்ட் மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 99 லட்சம் போ் பயணம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 99.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரி மாதம் 86.99 லட்சம் பேரும், பிப்ரவரி மாதத்தில் 86.65 லட்சம் பேரும், மாா்ச் மாதத்தில் 92.10 லட்சம் பேரும், ஏப்ரல் மாதத்தில் 87.89 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனா்.
மே மாதத்தில் 89.09 லட்சம் பேரும், ஜூன் மாதத்தில் 92.19 லட்சம் பேரும், ஜூலையில் அதிகபட்சமாக 1.03 கோடி போ் பயணம் மேற்கொண்டனா். ஆகஸ்ட் மாதத்தில் 99.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். அந்த மாதத்தில் அதிகபட்சமாக 14 -ஆம் தேதி 4.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.