இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
ஆடி அமாவாசை: மேட்டூர் காவிரி கரையில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் காவிரி கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான மக்கள் குவிந்தனர்.
புனித நதிகளில் ஒன்றாக காவிரி விளங்குகிறது. இதனால் மேட்டூர் காவிரி கரைகளில் உள்ள படித்துறைகளில் ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றன.
இன்று ஆடி அமாவாசை என்பதால் சேலம், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களின் பல பகுதியில் இருந்தும் மக்கள் மேட்டூர் அணை காவிரியில் தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடி வருகின்றனர்.
மேட்டூர் அணையின் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் புரோகிதர்களைக் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த வருகின்றனர்.
ஆடி அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களின் ஆன்மா இறைநிலை அடையும் என்பதோடு குடும்பத்தில் தீமைகள் விலகி நன்மைகள் ஏற்படும் என்ற ஆன்மிக அற நிலையை உணர்ந்த மக்கள் புண்ணிய நதியான காவிரியில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
அணைக்கட்டு முனியப்பன் கோவில், மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி சுவாமி தரிசனம் செய்தனர். பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.