செய்திகள் :

ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் அதிமுகவிற்கு நல்லது நடக்கும்: ஆர்.பி. உதயகுமார்

post image

எதிர்க்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் அந்த நோக்கம் நிறைவேறும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி மக்களுக்கு அன்னதானம் வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அவர் பேசுகையில்,

தவெக, நாதகவுக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஏன் அழைப்பு விடுக்கிறார்? அவர்கள் அதை நிராகரித்துள்ளனர் குறித்த கேள்விக்கு,

'அதிமுக, பிரதான கட்சியான திமுகவை எதிர்க்கிறது. தவெக, நாதக, பாமகவின் அன்புமணி, ராமதாஸ் திமுகவை எதிர்க்கிறார்கள். எதிர்க்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் அந்த நோக்கம் நிறைவேறும்.

திமுகவில் இருக்கும் கம்யூனிஸ்ட், விசிக திருமாவளவன் ஆகியோர் ஆட்சிக்கு மாறான கருத்துக்களைச் சொல்கின்றனர். 20 சதவீதம் ஆதரவு, 80 சதவீதம் எதிர்ப்பு நிலையில் உள்ளனர்.

திமுகவை எதிர்க்கும் கட்சிகளில் 50 ஆண்டு கால வரலாறு, கொள்கை கொண்ட, மக்கள் நம்பிக்கை கொண்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். 80 சதவீத திமுக எதிர்ப்பு பிரிந்து நிற்பதால் சிதைந்துவிடக் கூடாது.

எனவே, அனுபவத்தின் அடிப்படையில் மக்களுக்கு விடியல் கிடைக்க வேண்டும் என்ற மக்கள் விரும்பும் நோக்கத்தின் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.

எதிர்ப்பவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் நோக்கம் நிறைவேறும். எதிர்க்கும் கட்சியில் நம்பிக்கை பெற்ற தலைவர் எடப்பாடி. பிரிந்து நின்றால் திமுகவை வீழ்த்தும் நோக்கம் நிறைவேறாது' என்றார்.

அன்வர்ராஜா விலகல் குறித்த கேள்விக்கு, 'தனிப்பட்ட ஒருவர் எடுக்கும் முடிவு கட்சியைப் பாதிக்காது. அதை பொதுவிவாதத்திற்கு கொண்டு வர வேண்டிய தேவை இல்லை. நாங்கள் புலி வேட்டைக்குச் செல்கிறோம். இடையில் எலி. அணில் பாடும், ஓடும், செல்லும், அதையெல்லாம் பார்க்க வேண்டியது இல்லை' என்று பதிலளித்தார்.

ஓபிஎஸ் இணைப்பு குறித்த கேள்விக்கு, ஓபிஎஸ் இணைப்பு காலம் கடந்துவிட்டது என்றார்.

அதிமுகவுடன் பல கட்சிகள் இணைய அதிமுக - பாஜக கூட்டணி தடையாக உள்ளதா என்ற கேள்விக்கு, "நல்ல நோக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யலாம்" என்றார்.

மேலும், மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து முறையான விசாரணை நடக்க வேண்டும். ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு இருப்பதால் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிமுக ஆட்சியில் அரசு கஜானாவில் இருந்த பணம் மக்களுடைய பணம். அது பாதுகாப்பாக இருந்தது. ஆனால் திமுகவின் ஆட்சியில் அரசு கஜானா பணம் தங்களின் பணம் என சட்டைப்பையில் சர்வ சாதாரணமாக எடுத்து வைக்கப்படுகிறது.

500 கோடி, ஆயிரம் கோடி என்கிறார்கள். குற்ற உணர்வே இல்லாமல் மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதை கலையாக வைத்திருப்பதை பார்க்கும்போதுதான் வேதனையாக இருக்கிறது என்று கூறினார்.

கூட்டணிக்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்ற கேள்விக்கு, 'பொறுத்திருந்து பாருங்கள். கூட்டிக் கழித்து பாருங்கள், கணக்கு சரியாக வரும்.

எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது. வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதைப்போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார்.

நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணைய விசாரணை அதிமுகவுக்கு தடையாக இருக்குமா என்ற கேள்விக்கு, ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் எல்லாம் சரியாகும். அதிமுகவிற்கு நல்லதே நடக்கும் என்றார்.

ADMK former minister R.B. Udhayakumar said that the opposition parties will come together to defeat dmk.

இதையும் படிக்க | திருச்சியில் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் இபிஎஸ்?

இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்– பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ந... மேலும் பார்க்க

100 நாள் நடைப்பயணம்... திருப்போரூரில் இருந்து தொடங்கினார் அன்புமணி!

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தன்னுடைய 100 நாள்கள் நடைப்பயணத்தை திருப்போரூரில் இருந்து இன்று(ஜூலை 25) தொடங்கியுள்ளார்.திருப்போரூரில் உள்ள முருகன் கோயிலில... மேலும் பார்க்க

நெருப்புடன் விளையாடாதீர்கள்... முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ’நெருப்புடன் விளையாடாதீர்கள்’ என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

பிகாரில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை: முழுவீச்சில் எதிர்ப்போம்! -முதல்வர் ஸ்டாலின்

பிகாரில் வாக்காளர்களை நீக்குவதற்கான யுக்தியை தேர்தல் ஆணையம் கையாளுகிறது என்று முதல்வர் மு. க .ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இர... மேலும் பார்க்க

நடப்பாண்டில் 4ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை !

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் நான்காவது முறையாக அணையின் முழு கொள்ளளவு 120 அடியை எட்டியது.மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை! சூலூர்பேட்டையில் ஒருவர் கைது

திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.திருவள்ளூர், கும்... மேலும் பார்க்க