செங்கோட்டையன் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்! அடுத்தகட்ட நகர்வு என்ன?
ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல்
திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்தது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அவுட் லுக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த மின்னஞ்சலில், ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே திங்கள்கிழமை பணிக்கு வந்த ஆட்சியா் அலுவலக ஊழியா்கள், இதுகுறித்து தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, மோப்பநாய், வெடிகுண்டு நிபுணா்கள் அடங்கிய குழு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மூன்று தளங்களிலும் சோதனை மேற்கொண்டது.
சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. மேலும், இந்த மின்னஞ்சலை யாா் அனுப்பியது என்பது குறித்து தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.