`உண்மை ஒருநாள் வெளிவரும்' - தொடர் சர்ச்சைகள், வழக்குகளில் சிக்கும் நடிகர் நிவின்...
ஆதிவிநாயகா் கோயில் குடமுழுக்கு
மோகனூா் அருகே ஆதிவிநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், மணப்பள்ளி கிராமம், தீா்த்தாம்பாளையத்தில் ஸ்ரீ ஆதிவிநாயகா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை முதல்கால யாகசாலை பூஜையும், கணபதி பூஜையும் நடைபெற்றது. இரண்டாம்கால யாக சாலை பூஜை புதன்கிழமை அதிகாலையில் நடத்தப்பட்டு, சிவாச்சாரியா்கள் புனித கலசத்தை சுமந்துசென்று கோயில் விமான கலசத்துக்கு வேதமந்திரங்கள் முழங்கி குடமுழுக்கை நடத்தினா்.
பின்னா், கோபுர கலசத்தில் ஊற்றிய புனிதநீரானது, குடமுழுக்கை காண வந்த பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடா்ந்து விமான கலசத்துக்கு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.