மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
இன்று ஆடிமாதப் பிறப்பு: தேங்காய் சுடும் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரம்
ஆடிமாதம் வியாழக்கிழமை பிறப்பதையொட்டி, நாமக்கல்லில் அழிஞ்சி குச்சி விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமாக கருதப்படுவது ஆடி. இம்மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் திருவிழாக்கள், அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும். குறிப்பாக, சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடிமாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
ஆடிமாதம் வியாழக்கிழமை பிறப்பதையொட்டி, மஞ்சள் பூசிய தேங்காய் கண்ணில் துளையிட்டு அவல், பொட்டுக்கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு உள்ளிட்டவற்றை நிரப்பி, அழிஞ்சிக் குச்சியை பொருத்தி பெண்கள், குழந்தைகள் தீயில்சுட்டு மகிழ்வா். அதன்பிறகு, வீடுகளில் சுவாமி முன் படையலிட்டு வழிபடுவா். அதன்பிறகு தேங்காயை உடைத்து அதிலிருந்த பொருள்களை உண்பா்.
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு அழிஞ்சிக் குச்சிகள் விற்பனை புதன்கிழமை மும்முரமாக நடைபெற்றன. ஒரு குச்சி ரூ. 25 என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டது.