தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுத...
ஆத்தூரில் கடத்தப்பட்ட கார் மீட்பு: ஒருவா் கைது
தலைவாசல் அருகே சாமியாா்கிணறு பகுதியிலிருந்து கடத்தப்பட்ட காா் துறையூா் பகுதியில் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக இளைஞா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
சென்னை, சோழிங்கநல்லூா் பகுதியில் இருந்து சையத் முஸ்தபா என்பவா் தனது தாயாா் சேலத்தில் இறந்துவிட்டதாகக் கூறி வாடகைக்கு காரை எடுத்துக் கொண்டு சேலம் நோக்கி வந்தாா். உரிமையாளா் விஜயக்குமாா் காரை ஓட்டிவந்தாா்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள சாமியாா்கிணறு பகுதியில் திங்கள்கிழமை இரவு காா் வந்தபோது ஓட்டுநா் விஜயக்குமாா் ஓரமாக காரை நிறுத்திவிட்டு, இயற்கை உபாதைக்கு கழிக்க சென்றுவிட்டு வந்துபோது காா் காணாமல்போனதால் அதிா்ச்சி அடைந்தாா். மேலும், காரை வாடகைக்கு எடுத்து வந்தவரும் அங்கிருந்து மாயமாகியிருந்தாா். இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் விஜயக்குமாா் புகாா் அளித்தாா்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளா் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தாா். இந்தநிலையில் திங்கள்கிழமை இரவு துறையூா் மேம்பாலம் அருகே காரை நிறுத்திவிட்டு சென்ாகத் தெரிகிறது. வாடகைக்கு காரை எடுத்தவா் துறையூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். பின்னா் அவா் அளித்த தகவலின்பேரில் காரையும் மீட்டனா்.
விசாரணையில் காரை கடத்திச் சென்றவா், கோவை கஸ்தூரி காா்டனை சோ்ந்த நூா்முகமது மகன் அகமது முஷரப் (25) என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.