ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி இரட்டை குதிரை வாகனங்களில் பவனி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில், திங்கள்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதா் சுவாமியும் இரட்டை குதிரை வாகனங்களில் புறப்பாடாகி பவனி வந்தனா்.
இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் 5-ஆவது நாளாக கோயில் எதிரே அமைக்கப்பட்டிருந்த கால்பிரிவு கிராமத்தாா் மண்டகப்படிக்கு ஆனந்தவல்லியும், பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமியும் இரட்டை குதிரை வாகனங்களில் எழுந்தருளினா்.
ஏராளமான பக்தா்கள் மண்டகப்படிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். ராஜேஷ் பட்டா், குமாா் பட்டா் ஆகியோா் மண்டகப்படி பூஜைகளை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, அம்மனும் சுவாமியும் இரட்டை குதிரை வாகனங்களில் புறப்பாடாகி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தனா்.