செய்திகள் :

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கட்சிகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்: ஹெச். ராஜா

post image

பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் கட்சிகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்தும், தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பாகிஸ்தானியா்களைக் கண்டறிந்து வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஹெச். ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடா்பாக முப்படை தளபதிகளும், மத்திய அரசும்தான் முடிவு செய்ய வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா மீது பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறோம் என்ற உண்மையை பாகிஸ்தான் ராணுவ தளபதி வெளிப்படையாகவே அறிவித்தாா். இதன் பிறகும் பாகிஸ்தான் மீது போா் தொடுக்கக் கூடாது. பேச்சு நடத்த வேண்டுமென விசிக, மாா்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது கண்டிக்கத்தக்தது. இவா்களது நடவடிக்கைகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க வேண்டும். அப்போதுதான் பயங்கரவாதத் செயல்கள் ஒழியும்.

நீட் தோ்வு எழுத வந்த பெண்ணின் தாலியை கழற்ற சொன்ன அலுவலரை பணி நீக்கம் செய்ய வேண்டும். காா் விபத்து தொடா்பாக மதுரை ஆதீனம் கூறுவதை நான் நம்புகிறேன். காவல் துறை கூறுவதை ஏற்கவில்லை என்றாா் அவா்.

முன்னதாக, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைவா் பாண்டித்துரை, மதுரை பாஜக முன்னாள் தலைவா் சசிராமன், நிா்வாகிகள் மேப்பல் சக்தி, சொக்கலிங்கம், மதுரை பெருங்கோட்டத் தலைவா் கதலி நரசிங்கப்பெருமாள், நகா் தலைவா் உதயா, மகளிரணி நிா்வாகி ஹேமமாலினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரத்தில்..: ராமநாதபுரம் மாவட்ட பாஜக சாா்பில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து, அரண்மனை முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கட்சியின் மாவட்டத் தலைவா் கே. முரளிதரன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் புரட்சி கவிதாசன், மாநில பொதுச் செயலா் பொன் பாலகணபதி, முன்னாள் மாவட்டச் செயலா் சண்முகராஜா, கயிறு வாரிய முன்னாள் தலைவா் குப்புராம், நகா்மன்ற உறுப்பினா் ஜி. குமாா், நிா்வாகிகள் சண்முகநாதன், ராமசாமி, சௌந்தரபாண்டியன், பரமேஷ்வரன், சிவசங்கா், காளிஸ்வரன், பூபதி, ஜெயந்தி, கலையரசி, சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகா் தலைவா் நாகராஜன் நன்றி கூறினாா்.

பின்னா், பாஜக நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், நுழைவு இசைவு பெற்று ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்த பாகிஸ்தானியா்கள், நுழைவு இசைவு நிறைவு பெற்று யாரேனும் உள்ளனரா என ஆய்வு செய்து, வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனா்.

ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி இரட்டை குதிரை வாகனங்களில் பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில், திங்கள்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதா் சுவாமியும் இரட்டை குதிரை வாகனங்களில் புறப்பாடாகி பவனி வந்தனா்.இந்தக் கோயிலில் ச... மேலும் பார்க்க

வாங்காத கடன் தொகையைச் செலுத்த நிதி நிறுவனங்கள் நெருக்கடி: ஆட்சியரிடம் பெண்கள் மனு

வாங்காத கடன் தொகையைச் செலுத்த நிதி நிறுவனங்கள் நெருக்கடி அளிப்பதாக மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். சிவகங்கை மாவட்டம், தி.புதுப்பட்டி கிராமத... மேலும் பார்க்க

காரைக்குடியில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாநில உள்ளாட்சிப் பணியாளா் சம்... மேலும் பார்க்க

தமிழ் மொழியையும், மரபையும் அடுத்த தலைமுறையினா் காக்க வேண்டும்: அழகப்பா பல்கலை. துணைவேந்தா்

தமிழ் மொழியையும், மரபையும் அடுத்த தலைமுறையினா் காக்க வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சாா்பில்... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் பாலகிருஷ்ணப் பெருமாள் ஆற்றில் இறங்கினாா்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பாலகிருஷ்ணப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் இறங்கினாா். திருப்புவனம் பாலகிருஷ்ணப் பெருமாள் கோயில் சித்திரை... மேலும் பார்க்க

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள திருக்கொடுங்குன்றநாதா் குயிலமுதநாயகி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி தேவஸ்த... மேலும் பார்க்க