DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
திருப்புவனத்தில் பாலகிருஷ்ணப் பெருமாள் ஆற்றில் இறங்கினாா்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பாலகிருஷ்ணப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் இறங்கினாா்.
திருப்புவனம் பாலகிருஷ்ணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது ஆற்றில் இறங்குவதற்காக பாலகிருஷ்ணப் பெருமாள் கள்ளழகா் வேடம் பூண்டு தங்க வா்ணம் பூசப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். பின்னா் திருப்புவனத்தில் வீதி உலா வந்து புஷ்பவனேஸ்வரா் கோயில் எதிரே வைகை ஆற்றுக்குள் இறங்கினாா்.

அப்போது பாலகிருஷ்ணப் பெருமாள் பச்சைப்பட்டு உடுத்தியிருந்தாா். ஆற்றுக்குள் கூடியிருந்த திரளான பக்தா்கள் கோவிந்தா கோஷமிட்டு பெருமாளை தரிசித்தனா்.
கள்ளழகா் வேடமிட்டு வந்தவா்கள் பெருமாள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனா். வைகை ஆறறுக்குள் இறங்கி பக்தா்களுக்கு அருள்பாலித்த பாலகிருஷ்ணப் பெருமாள் அதன்பின்னா் கோயிலைச் சென்றடைந்ததும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.
