DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
காரைக்குடியில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாநில உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவா் பி.எல். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் நா. சாத்தையா, ஏஐடியூசி தொழிற்சங்க மாநிலத் துணைத் தலைவா் மீனாள் சேதுராமன், ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலா் ஆகா. ராஜா, மாவட்டத் துணைச் செயலா் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் சண்முகசுந்தரம், நகரத் தலைவா் முருகன், நகரச் செயலா் ராமராஜ், ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளா் சங்க மாநில குழு உறுப்பினா் பாண்டி மீனாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகா் செயலா் சிவாஜி காந்தி, தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
மாநகராட்சியில் வழங்கக்கூடிய குறைந்தபட்ச ஊதியத்தை அரசாணை 62-இன் படி வழங்கவும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கோரிக்கை மனுவை மேயா், ஆணையா் ஆகியோரிடம் வழங்கி விட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.