ஆனிவார ஆஸ்தானம்: 2 நாள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து
வரும் ஜூலை 16 அன்று ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் 2 நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த உற்சவத்தை முன்னிட்டு ஜூலை 15 அன்று கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறும். இதன் காரணமாக, இரண்டு நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படும்.
ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் புரோட்டோகால் பிரமுகா்கள் தவிர, விஐபி பிரேக் தரிசனங்களுக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
எனவே பக்தா்கள் இதைக் கருத்தில் கொண்டு தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.