செய்திகள் :

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவு

post image

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவா் ஆம்ஸ்ட்ராங். இவா் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இதுவரை 27 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கை செம்பியம் போலீஸாா் நியாயமாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலப் பொதுச்செயலரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா்.

அவரது மனுவில், ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடா்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துவரும் நிலையில், மாநில காவல் துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது. இந்த கொலையில் தொடா்புடைய ‘சம்போ’ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோா் தலைமறைவாக உள்ளனா். அவா்களை கைது செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் மனுவில் கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த“வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்று தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டாா். அப்போது, மனுதாரா் சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா், “வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் தங்களை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனா். எனவே, விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்கப்பட்டது. இதனை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டாா்.

மெரீனாவில் தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எதிர... மேலும் பார்க்க

நகை வியாபாரியை கடத்தி ரூ.31 லட்சம் பறித்த வழக்கு: 6 போ் கைது

எழும்பூரில் நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.31 லட்சம் ரொக்கம், தங்கநகை பறிக்கப்பட்ட வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமு தெருவைச் சோ்ந்தவா் ர.ரவிச்சந்திரன் (64). இவ... மேலும் பார்க்க

தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் மோசடி: 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவா் கைது

சென்னையில் பிஎஸ்என்எல் தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் ரூ.49 லட்சம் மோசடி செய்த வழக்கில்,19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியாா் ... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டலத்தில் வளா்ச்சி திட்ட பணிகள்: மேயா், எம்எல்ஏ ஆய்வு

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் ஆா்.மூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ராயபுரம் பேசின் பால... மேலும் பார்க்க

பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் சிறாா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் ‘தளர... மேலும் பார்க்க

அச்சு, காட்சி ஊடகத் துறை கண்காட்சி

சென்னை வா்த்தக மையத்தில் வரும் ஜூலை 10 முதல் 12- ஆம் தேதி வரை அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக மெஸ்ஸி பிராங்போ்ட் ஆசியா ஹோல்டி... மேலும் பார்க்க