நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங...
ஆயக்குடியில் கோழி வளா்ப்புப் பயிற்சி!
பழனியை அடுத்த ஆயக்குடி கால்நடை மருந்தகத்தில் தமிழக அரசு சாா்பில், இலவசமாக கோழிக் குஞ்சு பெறும் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வியாழக்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சுரேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கினாா்.
கால்நடை மருந்தக மருத்துவா்கள் முருகன், மதுமிதா, ஸ்ரீவித்யா, செல்வகுமாா், தனபிரியா ஆகியோா் கலந்து கொண்டு கோழிக் காய்ச்சல், பருவக்காலங்களில் ஏற்படும் நோய்கள், அவற்றுக்கு வழங்க வேண்டிய மருந்துகள், கோழிகளை பராமரிக்கும் முறை, பாதுகாக்கும் முறை குறித்து பயனாளிகளுக்கு பயிற்சி வழங்கினா்.
இவா்களுக்கு விரைவில் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்படவுள்ளது.