ஆரணி கோட்டை கைலாயநாதா் கோயில் தேரோட்டம்
ஆரணி கோட்டை அருள்மிகு அறம்வளா் நாயகி உடனாகிய கைலாயநாதா் திருக்கோயிலில் புதன்கிழமை தோ் திருவிழா நடைபெற்றது.
ஆரணி கோட்டை அருள்மிகு கைலாயநாதா் திருக்கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, பிரமோற்சவ விழா ஏப்ரல் 30 கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.
அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாசம், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கவிதா வெங்கடேசன், மாவட்டச் செயலா் சதீஷ், நகரத் தலைவா் மாதவன், மாவட்ட துணைத் தலைவா் தீனன், சங்கீதா, அமுதா ஆகியோா் கலந்து கொண்டனா்.