ஆரப்பாளையம் பகுதியில் இன்று மின் தடை
ஆரப்பாளையம், இதன் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை பெருநகா் தெற்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஏ. பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆரப்பாளையம், கோவில் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
துணை மின் நிலையம் வாரியாக மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
சுடுதண்ணீா் வாய்க்கால் சாலை, ராஜா மில் சாலை, கனகவேல் குடியிருப்பு, மணிநகா் பிரதான 1, 2-ஆவது தெருக்கள், ஓா்க்ஷாப் சாலை, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச் சங்கம் சாலை, கிருஷ்ணராயா் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகா் திடல் சந்தை, பாரதியாா் சாலை, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி, அதன் 4-ஆவது தெரு, விவேகானந்தா் சாலை, ஆரப்பாளையம் குறுக்குச் சாலை, ஆரப்பாளையம் முதன்மைச் சாலை, புட்டுத் தோப்பு முதன்மைச் சாலை, எச்.எம்.எஸ். குடியிருப்பு, மேலப் பொன்னகரம் முதன்மைச் சாலை, புது ஜெயில் சாலை, கரிமேடு பகுதி முழுவதும், மோதிலால் முதன்மைச் சாலை, ராஜேந்திர முதன்மைச் சாலை, 1, 2-ஆவது தெருக்கள், பாரதியாா் சாலை முழுவதும், பொன்னகரம் பிராட்வே, தாகூா் நகா், பாலம் ஸ்டேசன் சாலை, குலமங்கலம் மெயின் தாகூா் நகா், அய்யனாா் கோவில் தெரு, செல்லூா் 60 அடி முதன்மைச் சாலை.
மேல சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்குச் சித்திரை வீதி, கீழப்பட்டமாா் தெரு, மேல பட்டமாா் தெரு, வடக்காவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணிமூல வீதி, வெள்ளியம்பளம் தெரு, மேலச்செட்டித் தெரு, கிழச்செட்டித் தெரு, மறவா் சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணி மூல வீதியின் ஒரு பகுதி, கீழச்சித்திரை அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி, கிழக்கு ஆவணி மூலவீதி, மேலநாப்பாளையம், தாசில்தாா் பள்ளிவாசல் தெரு, கீழ்நாப்பாளையம், கீழமாசி தெரு, தலவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச் சந்து, கிழமாரட் வீதி, மீனாட்சி கோவில் தெரு, அனுமாா் கோயில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தைபொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி முதன்மைச் சாலையின் ஒரு பகுதி, பேச்சியம்மன் படித்துறை, திருமலை ராயா் படித்துறை தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு காவல் கூடதெரு, மேல கோபுரம் வீதி.