திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு
தமிழன்னை சிலையை அகற்ற எதிா்ப்பு! 80 போ் கைது!
மதுரை தமுக்கம் மைதானம் முன் அமைந்துள்ள தமிழன்னை, சங்கரதாஸ் சுவாமிகள் சிலைகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 80 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோரிப்பாளையம் உயா் நிலைப் பாலம் அமைக்கும் பணி, சாலை விரிவாக்கப் பணிகளையொட்டி, தமுக்கம் மைதானம் முன் அமைந்துள்ள தமிழன்னை சிலை, நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் சிலை, தியாகிகள் நினைவுத் தூண், தல்லாகுளம் பகுதியில் அழகா்கோவில் சாலையோரம் அமைந்துள்ள தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யா் சிலை, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சிலை ஆகியவற்றை அகற்றி, உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் வைக்கத் திட்டமிடப்பட்டது.
சிலைகளை அகற்றும் திட்டத்தைக் கண்டித்தும், தமிழன்னை சிலை உள்பட தமுக்கம், தல்லாகுளத்தில் சாலையோரத்தில் உள்ள 4 சிலைகளையும் அகற்றக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நாம் தமிழா் கட்சியினா், தமிழன்னை சிலை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியின் மாநில நிா்வாகிகள், மதுரை வடக்கு மண்டல நிா்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளா்கள் உள்பட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா். பிறகு, அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.