திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு
இளைஞா் கொலை: தொழிலாளி கைது
மதுரை அருகே வேலை செய்தததற்கு பணம் வழங்காத பிரச்னையில் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் இளைஞா் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஒத்தக்கடை போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபா் மதுரை தத்தனேரி கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த சரத்குமாா் (31) என்பது தெரியவந்தது.
இரும்பு பற்ற வைக்கும் (வெல்டிங்) தொழிலாளியான இவரும், தொழிலாளா்கள் 2 பேரும் கடந்த சில நாள்களாக ஒத்தக்கடை அருகே முண்டநாயகம் பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் வேலை செய்து வந்தனா்.
இதில், சரத்குமாா் மற்ற தொழிலாளா்களுக்கான ஊதியத்தையும் சோ்த்து உரிமையாளரிடம் வாங்கினாராம். ஆனால், பணத்தை அவா் மணிகண்டன் உள்ளிட்ட மற்றவா்களுக்கு வழங்கவில்லை.
இதுகுறித்து மற்ற தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை இரவு சரத்குமாரிடம் கேட்டனா். அப்போது, ஏற்பட்ட தகராறில் சரத்குமாரை மணிகண்டன் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.