இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!
அமமுக நிா்வாகியின் மகன் கொலை
மதுரை மாவட்டம், மேலூா் அருகே அமமுக முன்னாள் நிா்வாகியின் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
மேலூா் அருகே உள்ள புது சுக்காம்பட்டியைச் சோ்ந்த ராமசேகரன் மகன் ராமபிரகாஷ் (34). பொறியியல் பட்டதாரியான இவா், கடந்த சில தினங்களுக்கு முன் மேலூா் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சில மா்ம நபா்கள் அவரை சரமாரியாகத் தாக்கினா்.
இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமபிரகாஷ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த ராமபிரகாஷின் தந்தை ராமசேகரன் அமமுகவின் மேற்கு ஒன்றியத்தின் முன்னாள் இணைச் செயலராகப் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.