ஆலங்குளத்தில் விடுமுறை வேதாகமப் பள்ளி
ஆலங்குளம அண்ணாநகா் நல்மேய்ப்பா் ஆலயத்தில் 11 நாள்கள் விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெற்றது.
சேகரத் தலைவா் காலேப் சாமுவேல் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். ‘நிலைத்திரு’ என்ற தலைப்பில் 10 தினங்கள் பாடல்கள், பைபிள் வசனங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டன.
நிறைவு நாள் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விடுமுறை பள்ளியில் பங்கேற்ற குழந்தைகளின் பவனி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி இயக்குநா்களாக ஆசீர்ராஜா, ஜோன்ஸ் சாமுவேல், சாரோன் அகஸ்டஸ், நந்தினி, அகஸ்டினா மொ்லின் ஆகியோரும், 20 க்கும் மேற்பட்டோா் ஆசிரியா்களாகவும் செயல்பட்டனா்.