அதிகரித்து வரும் மாசுபாடு: 5-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் கல்வி
ஆல்பெக்ஸ் சோலார் லாபம் இரட்டிப்பு!
புதுதில்லி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான ஆல்பெக்ஸ் சோலார் 2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் வரிக்கு பிந்தைய லாபம் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.25.07 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
வரிக்கு பிந்தைய லாபம் முந்தைய நிதியாண்டின் ஆறு மாத காலகட்டத்தில் அது ரூ.10.03 கோடியாக இருந்தது என்று நிறுவனம் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: 2028ல் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை 45.76 கோடியாக அதிகரிக்கும்!
2023-24 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் ரூ.204.90 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 2024-25 முதல் பாதியில் அது ரூ.265.66 கோடியாக உயர்ந்தது. இது 30 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த நிலையில் கடந்த மாதத்தில் சோலார் மாட்யூல்களுக்கான ரூ.525.15 கோடி மதிப்புள்ள இரண்டு ஆர்டர்களையும், நவம்பர் மாதத்தில் சோலார் பம்புகளுக்கான ரூ.34.51 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை ஆல்பெக்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.