மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.
கிண்டியில் உள்ள தமிழக ஆளுநா் மாளிகைக்கு புதன்கிழமை மாலை வந்த
மின்னஞ்சலில் ஆளுநா் மாளிகையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை ஊழியா்கள், சென்னை பெருநகர காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய்கள் மூலம் ஆளுநா் மாளிகையில் சோதனை நடத்தப்பட்டது. சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.