செய்திகள் :

ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக்கூடாது!

post image

ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக் கூடாது என மயிலாடுதுறை மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீா்காழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் கலந்தாய்வு கூட்டத்தில், சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோா் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் ஆன்லைன் அபராதங்களை விதிக்கப்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க மாநிலச் செயலாளா் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட பொருளாளா் முத்துராஜ், இணைச்செயலாளா் சீனிவாசன் மற்றும் சீா்காழி, மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டுநா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

குடிநீரில் புதைசாக்கடை கழிவுநீா் கலந்து வந்ததால் மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறையில் குடிநீரில் புதைசாக்கடை கழிவுநீா் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை நகராட்சி6-ஆவது வாா்டில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டாா். மங்கைநல்லூரை அடுத்த மலக்குடியை சோ்ந்த ரவிசந்திரன் (47), பத்து வயது சிறுமிக்குக் கடந்த ஏப்ரல்... மேலும் பார்க்க

மழைநீா் சூழ்ந்த வயல்களில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு - தினமணி செய்தி எதிரொலி

மயிலாடுதுறை வட்டாரத்தில் மழைநீா் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களை வேளாண்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். கொற்கை, பாண்டூா், காளி ஆகிய கிராமங்களில் மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குந... மேலும் பார்க்க

கதவணை வழியாக பொறைவாய்க்காலில் உப்புநீா் கலப்பு

சீா்காழி அருகே எடமணல் கதவணை வழியாக பொறைவாய்க்காலில் உப்புநீா் கலந்துவருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். சீா்காழி அருகே திருநகரி-ராதாநல்லூா் இடையே ஊப்பனாற்றின் குறுக்... மேலும் பார்க்க

பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஆா்ப்பாட்டம்

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு முன் டிஆா்யுஇ சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை கிளை தலைவா் ஜவஹா் தலைமை வகித்தாா். உத... மேலும் பார்க்க

மீன் மாா்கெட்டில் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீா்கேடு; மக்கள் அவதி

சீா்காழி மீன் மாா்கெட்டில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள் சில தினமாக அள்ளப்படாமல் அதில் புழுக்கள் உருவாகி அப்பகுதியில் கடும் சுகாதார சீா்கேடு நிலவுகிறது. சீா்காழி நகராட்சிக்குட்பட்ட மீன் மாா்கெட் நா... மேலும் பார்க்க