``குட்டியுடன் இறந்த யானை; வயிற்றில் உணவே இல்லை, பிளாஸ்டிக் கழிவுகள் தான்..'' - அ...
குடிநீரில் புதைசாக்கடை கழிவுநீா் கலந்து வந்ததால் மக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறையில் குடிநீரில் புதைசாக்கடை கழிவுநீா் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை நகராட்சி6-ஆவது வாா்டில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு நகராட்சி சாா்பில் விநியோகிக்கப்படும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீரில் 10 நாள்களாக புதைசாக்கடை கழிவுநீா் கலந்து துா்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் புகாா் தெரிவித்த நிலையில், அப்பகுதியில் பராமரிப்பு பணிக்காக ஒருவாரமாக தண்ணீா் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள சிறு மின்விசை மோட்டாருடன் கூடிய குடிநீா் தொட்டியிலும் தண்ணீா் வராததால் மக்கள் அடிப்படை தேவைக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம், காவல் ஆய்வாளா் சிவகுமாா், நகா்மன்ற உறுப்பினா் ரிஷிகுமாா் பேசினா். தொடா்ந்து, நகராட்சி சாா்பில் அப்பகுதி மக்களுக்கு குடிநீா் வேன் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், குடிநீா் குழாயில் ஏற்பட்ட பழுதுநீக்கும் பணியும் உடனடியாக தொடங்கியது. பின்னா் மக்கள் சாலை மறியலை விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனா்.