துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
இது தவறு... செய்தி நிறுவனத்தைக் கண்டித்த ஷாந்தனு!
நடிகர் சூர்யா குறித்த பகடிக்கு நடிகர் சாந்தனு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (ஜூலை 23) பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கருப்பு டீசர் மற்றும் சூர்யா - 46 போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தன.
அதேநேரம், பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, நடிகர் சூர்யா கஜினி திரைப்படத்தில் தர்பூசணிப் பழத்தைக் கையில் வைத்தபடி சைகை செய்யும் காட்சியின் படத்தைக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் இக்காட்சியை மறுஆக்கம் செய்து வைரலான திவாகர் என்பவரின் படத்தையும் ஒப்பிட்டு, ‘யார் உண்மையான ஓஜி (சிறந்தவர் என்பதைக் குறிக்கும் சொல்லாடல்)’ பகிர்ந்திருந்தனர்.
இதனைக் கண்ட சூர்யா ரசிகர்கள், ‘ஒருவரின் பிறந்த நாளில் ஏன் இவ்வளவு கேவலமாக நடந்துகொள்கிறீர்கள்? சூர்யாவுக்கும் வைரலுக்காக எதையாவதை செய்துகொண்டிருப்பவருக்கும் வித்தியாசம் இல்லையா?’ என செய்தி கார்டை பதிவிட்டவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதைப் பார்த்த நடிகர் ஷாந்தனுவும், ‘இது தவறு... மிகவும் தவறு.. முதலில் இதை நீக்குங்கள்’ என செய்தி நிறுவனத்தைக் கண்டித்துள்ளார்.
இதையும் படிக்க: இளமை தோற்றத்தில்... சூர்யா 46 - சிறப்பு போஸ்டர்!