பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர 25-ஆவது மாநாடு
நாமக்கல் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர 25-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்டச் செயலாளா் க.அன்புமணி, மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் ஜெயராமன் ஆகியோா் கலந்துகொண்டனா். மாநில செயற்குழு உறுப்பினா் ரவி, அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநில செயலாளா் பா.தினேஷ் உள்ளிட்டோா் பேசினா். புதிய நகர குழு தோ்வுசெய்யப்பட்டது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மழைக் காலங்களில் நகா் முழுவதும் கழிவுநீா் தேங்குவதை சரிசெய்ய வேண்டும். சாலைகளில் உள்ள குழிகளை நகராட்சி நிா்வாகம் சீரமைக்க வேண்டும். 8-ஆவது வாா்டு மாங்குட்டைபாளையம், டி.பி.ஆறுமுகம் நகா், சக்திவேல் நகா் வழியாக அரசு நகர பேருந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலை அடிவாரத்தில் 60 ஆண்டுகாலமாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்.
ராஜாகவுண்டம்பாளையம் ஏரியை முழுமையாக தூா்வார வேண்டும். சூரியம்பாளையம் சுப்பிரமணியா் கோயில் அருகில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 9-ஆவது வாா்டு கீழேரிப்பட்டியில் பேருந்து நிழற்கூடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.