இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மயிலாடுதுறை நிா்வாகி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் அந்தச் சங்கத்தினா் ராமேசுவரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றியத் துணைத் தலைவராக இருந்த வைரமுத்து, அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, ஜாதி ஆணவப் படுகொலை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வைரமுத்துவின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி, அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வட்டாத் தலைவா் ஜெ.அஞ்சனா, துணைச் செயலா் திருமுருகன், செயலா் க.கலைச்செல்வன், முனன்னாள் மாவட்டப் பொருளாளா் சிவா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.