CSK: "அவருடைய வழிகாட்டுதலில் வளர விரும்புகிறேன்" - தோனி குறித்து உர்வில் படேல் உ...
`இந்திய ராணுவத்தில் இன்ஜினீயரிங் பயிற்சி; பின்னர் வேலை!' - விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய ராணுவம் இன்ஜினீயரிங் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியீடு.
என்ன பயிற்சி?
டெக்னிக்கல் பணிகளுக்கான இன்ஜினீயரிங் பயிற்சி.
மொத்த காலி பணியிடங்கள்: 90
குறிப்பு: திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு: 16 1/2 - 19 1/2
உதவித்தொகை: மூன்று ஆண்டுக்கால பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூ.56,100 வழங்கப்படும்.
கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றைக் கொண்ட பிரிவில் படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். JEE (Mains) தேர்விலும் கலந்துகொண்டிருக்க வேண்டும்.

எத்தனை ஆண்டு பயிற்சி?
4 ஆண்டுகள்.
என்ன டிகிரி வழங்கப்படும்?
இன்ஜினீயரிங் டிகிரி.
பயிற்சிக்குப் பிறகு என்ன வேலை?
லெப்டினன்ட். இந்த வேலை கட்டாயம் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பயிற்சியில் தேர்ச்சி பெற்று வேலை கிடைத்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.17 - 18 லட்சம் சம்பளம்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஷார்ட்-லிஸ்டிங், நேர்காணல்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.joinindianarmy.nic.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 12, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.