செய்திகள் :

இந்தியத் திரைகளுக்கு வரும் ‘தி ப்ரூடலிஸ்ட்’!

post image

சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வரும் ‘தி ப்ரூடலிஸ்ட்’ திரைப்படம் இந்தியத் திரையரங்குகளில் வரும் பிப்.28 முதல் வெளியாகவுள்ளது என யூனிவர்ஸல் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று (பிப்.14) தெரிவித்துள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற அட்ரியன் ப்ரூடி கதாநாயகனாக நடித்து கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் வெளியான ‘தி ப்ரூடலிஸ்ட்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்கலில் திரையிடப்பட்டு கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்து நாட்டு திரையரங்குகளில் வெளியாகி பேக் டூ பேக் வெற்றியடைந்தது.

நார்வே நாட்டு எழுத்தாளர் மோனா ஃபாச்ட்வோல்டு உடன் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதிய ப்ராடி கோர்பெட் இந்த திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

இதையும் படிக்க:இயக்குநராக 3, நடிகராக 50..! பாசில் ஜோசப் பேட்டி!

திரைப்படத்தின் போஸ்டர்

இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு தப்பிய யூத கட்டிடக் கலைஞர் மற்றும் அவரது மனைவியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கோல்டன் குளோப் விருதுகளில் 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த டிராமா திரைப்படத்திற்கான விருதுகளை வென்றுள்ளது.

மேலும், வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கு சில்வர் லயன் விருது உள்பட 5 விருதுகளை வாங்கி குவித்தது.

தி ப்ரூடலிஸ்ட் திரைப்படத்தில் வரும் ஓர் காட்சி

முன்னதாக, ஃபெசிஸிடி ஜோன்ஸ் மற்றும் கய் பியர்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க; ஜோ ஆல்வய்ன், ரஃபே கஸிடி, ஸ்டேசி மார்டின், எம்மா லையர்ட், இஸாச் டி பான்கோல் ஆகியோரின் நடிப்பில் ஓர் வரலாற்றுத் திரைப்படம் உருவாகியுள்ளது.

ஆஸ்கார் விருதுகளில் 10 பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘தி ப்ரூடலிஸ்ட்’ திரைப்படம் ஏற்கனவே ஒடிடியின் மூலமாகவும் திரைப்பட விழாக்களின் மூலமாகவும் பார்த்த இந்திய ரசிகர்களினால் சமூக வலைதளங்களில் பெருமளவில் பேசப்பட்டு வந்த நிலையில் வரும் பிப்.28 ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் வழிப்பறி கும்பலைச் சேர்ந்த 5 கொள்ளையர்கள் காவல் துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். காசியாபாத்தில் நேற்று (பிப்.13) இரவு வியாபாரியான சதீஷ் சந்த் கா... மேலும் பார்க்க

உலக சாதனைக்கு முயன்ற இந்திய வீரர் பலி!

உலக சாதனைக்கு முயன்ற இந்தியாவைச் சேர்ந்த சைக்கிள் வீரர் சிலி நாட்டில் சாலை விபத்தில் பலியாகியுள்ளார். தென் அமெரிக்க கண்டத்தில் அதிவேகமாக 10,000 கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து உலக சாதனைப் படைக்க முயன... மேலும் பார்க்க

காங்கோவில் 2வது விமான நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிப்படை?

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மற்றொரு விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் கிளர்ச்சிப் படையொன்று தெரிவித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் ஆதரவுப்பெற்று காங்கோவினுள் இயங்க... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அந்நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 125 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று (பிப்.14) ஏற்பட்டுள்ளதாக தேசிய நில... மேலும் பார்க்க

துணை முதல்வர் நிகழ்ச்சியில் பறந்து வந்த டிரோன்! 2 பேர் கைது!

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் நிகழ்ச்சியில் அனுமதியின்றி டிரோனை பறக்கவிட்ட 2 பேர் இன்று (பிப்.14) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாசிக் மாவட்டத்தின் ஹிவாலி பகுதியி... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

போப் பிரான்சிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் நகரம் தெரிவித்துள்ளது.ஐரோப்பாவிலுள்ள தன்னாட்சிப் பெற்ற நாடான வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க சபையின் திருத்தந்தையுமான... மேலும் பார்க்க