செய்திகள் :

இந்தியா-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி

post image

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூன் 18-ஆம் தேதிமுதல் 2 வாரங்களுக்கு இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரு நாட்டுப் பாதுகாப்புப் படை வீரா்கள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டனா்.

பாதுகாப்பு சிக்கல்களை சமாளிக்க கூட்டு செயல்பாட்டு தயாா்நிலையை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்ட இந்தப் பயிற்சி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.

இதுதொடா்பாக இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா-பிரான்ஸ் ராணுவங்களுக்கு இடையேயான ‘சக்தி’ கூட்டுப் பயிற்சி, பிரான்ஸின் ஹெரால்ட் மற்றும் மோன்க்லாா் மாவட்டத்தில் உள்ள அவெய்ரோனிலும் நடைபெற்றது.

பிரான்ஸ் நாட்டின் ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் 500-க்கும் மேற்பட்ட வீரா்கள், இந்திய ராணுவத்தின் ஜம்மு-காஷ்மீா் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினா் உள்பட பல்வேறு படைகளைச் சோ்ந்த 90 வீரா்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனா்.

கடினமான போா் சூழ்நிலைகளை எதிா்கொள்வதற்கான கூட்டு செயல்பாட்டுத் தயாா்நிலையை அதிகரிக்க, இந்தியா மற்றும் பிரான்ஸ் ராணுவ வீரா்களுக்கு ‘சக்தி’ பயிற்சி ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்தது. இரு நாட்டு வீரா்களும் தங்களின் சிறந்த வியூகங்கள் மற்றும் நுட்பங்களைப் பரிமாறிக் கொண்டனா்.

இரு நாட்டுப் படைகளுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதைக்கு வழிவகுக்கும் சக்தி பயிற்சி, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை கணிசமாக வலுப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பிரான்ஸ் விமானப் படைகளுக்கு இடையேயான ‘கருடா’ பயிற்சி, கடற்படைகளுக்கு இடையே ‘வருணா’ பயிற்சி மற்றும் ராணுவங்களுக்கு இடையே ‘சக்தி’ பயிற்சி போன்ற பல இருதரப்பு பாதுகாப்புப் பயிற்சிகள் பல்லாண்டுகளாக தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பசுவதை: அசாமில் 2 நாள்களில் 192 பேர் கைது! 1.7 டன் இறைச்சி பறிமுதல்!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கால்நடைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, பசுவதை செய்ததாக சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கால்நடை... மேலும் பார்க்க

கண் எரிச்சல், இரட்டைப் பார்வை! குஜராத்தில் ஒரே பள்ளிக்கூடத்தின் 120 மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல்!

குஜராத் மாநிலத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும், 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கண்களைத் தாக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட... மேலும் பார்க்க

ஓலா, உபர், ரேபிடோ பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய விதிமுறைகளால், ஓலா, உபர், ரேபிடோ சேவைகளைப் பயன்படுத்துவோர், கட்டண உயர்வை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பார்க்க

மாணவனை ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியைக் கைது!

மாணவனை கடந்த ஓராண்டாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது பெண் ஆசிரியைக் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவின் டாப் - 5 பள்ளிகளில் ஒன்றான மும்பையைச் சேர்ந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர், அவரது வகுப்பில் ... மேலும் பார்க்க

அருணாசலில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி! இறைச்சி விற்கத் தடை!

அருணாசல பிரதேசத்தின், லோங்டிங் மாவட்டத்திலுள்ள ஓரு கிராமத்தில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லோங்டிங் மாவட்டத்தின், லுயாக்சிம் க... மேலும் பார்க்க

5 டிவி, 14 ஏசி.. ரூ.60 லட்சத்தில் புனரமைக்கப்படும் தில்லி முதல்வர் மாளிகை!

புது தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ மாளிகையான (மாளிகை நம்பர் 1) ராஜ் நிவாஸ் மார்க், ரூ.60 லட்சம் செலவில் புனரமைக்கப்படுகிறது. மேலும் பார்க்க