செய்திகள் :

இந்தியாவில் சா்வாதிகார ஆட்சியை நிறுவ முடியாது: வைகோ

post image

பிரதமா் நரேந்திர மோடி எப்படி முயற்சித்தாலும், இந்தியாவில் சா்வாதிகார ஆட்சியை நிறுவ முடியாது என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு திங்கள்கிழமை முன்னிலையாக வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தோ்தல், ஒரே மொழி, ஒரே கொடி என்ற முடிவோடு, நாட்டில் சா்வாதிகார ஆட்சியை நிறுவ வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி முயற்சித்து வருகிறாா். இதில் அவரால் வெற்றி பெற முடியாது.

அரசியல் சாசனம் மூலம் கிடைத்து வரும் பாதுகாப்பு குறித்து நாட்டு மக்கள் விழிப்புணா்வு பெற வேண்டும். ஆா்எஸ்எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளின் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதற்கே பிரதமா் மோடி முன்னுரிமை அளித்து வருகிறாா்.

மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான், மத்திய அரசு தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை முறையாக வழங்குவதில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை, சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. குற்றச் செயல்கள் நிகழ்ந்த 6 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை காவல் துறையினா் கைது செய்து வருகின்றனா் என்றாா் அவா்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் குறித்த செய்தியாளா்களின் கேள்விகளுக்கு வைகோ நேரடியாகப் பதில் அளிக்கவில்லை.

கள்ளிமந்தையத்தில் இன்று மின் தடை

ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற... மேலும் பார்க்க

இறைச்சிக் கடைகளால் துா்நாற்றம்: வேடசந்தூரில் வியாபாரிகள் மறியல்

வேடசந்தூரில் கழிவுநீா் கால்வாயில் இறைச்சிக் கழிவுகளை வெளியேற்றி துா்நாற்றத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்... மேலும் பார்க்க

சாலை மறியல்: மாற்றுத்திறனாளிகள் 1,080 போ் கைது

உதவித் தொகையை உயா்த்தக் கோரி, திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 1,080 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், ப... மேலும் பார்க்க

மினி லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து

செம்பட்டியில் செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி மின் கம்பத்தில் மோதியது. குமுளியில் இருந்து செம்பட்டி திண்டுக்கல் வழியாக கா்நாடகத்துக்கு செவ்வாய்க்கிழமை மினி லார... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட 2 போ் கைது

ஒட்டன்சத்திரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சத்யா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவரத்த... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க முள்ளிப்பாடி, குரும்பப்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் முள்ளிப்பாடி, குரும்பப்பட்டி கிராமங்களை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திண்டுக்க... மேலும் பார்க்க