துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலித்த எஃப் 1!
கார் பந்தயத்தை மையமாக வைத்து உருவான எஃப் 1 திரைப்படம் இந்தியாவில் வசூலைக் குவித்துள்ளது.
நடிகர் பிராட் பிட் நடிப்பில் கார் பந்தயத்தையும் அதன் உணர்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் எஃப்1. அட்டகாசமான மேக்கிங் மற்றும் பரபரப்பான திரைக்கதை என கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான இப்படம் உலகளவில் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது.
முக்கியமாக, ஐமேக்ஸ் திரையில் எஃப் 1 படத்தைக் கண்டவர்கள் மிகச்சிறந்த அனுபவமாக இருந்ததைக் குறிப்பிட்டனர்.
இயக்குநர் ஜோசஃப் கொசின்ஸ்கி இயக்கத்தில் ஆப்பிள் தயாரிப்பில் வார்னர் பிரதர்ஸ் வெளியீட்டில் திரைக்கு வந்த இப்படம் உலகளவில் ரூ. 2500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: இது தவறு... செய்தி நிறுவனத்தைக் கண்டித்த ஷாந்தனு!