`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
சென்னை புறநகா் பகுதியில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஆக. 7) ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சென்னையில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளங்களில் வியாழக்கிழமை (ஆக. 7) காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.10 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புகா் மின்சார ரயில்களும், மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55-க்கு கடற்கரை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படவுள்ளன.
அதேபோல், சென்ட்ரலிலிருந்து காலை 10.15, பிற்பகல் 12.10,1.05 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயில்களும், காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 1, 2.30, 3.15, மணிக்கும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.10, 3.15, இரவு 9 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
மேலும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்கு நெல்லூருக்கும், மறுமாா்க்கமாக நெல்லூரிலிருந்து மாலை 6.45 மணிக்கு சூலூா்பேட்டைக்கு செல்லும் ரயில்கள் என மொத்தம் 17 ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
பகுதி ரத்து: இதற்கிடையே வியாழக்கிழமை (ஆக. 7) செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்குப் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் புகா் மின்சார ரயிலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயிலும் கடற்கரையுடன் நிறுத்தப்படும்.
சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலிருந்து ஆக. 7-இல் காலை 10.30 மணிக்கு பொன்னேரிக்கும், 11.35, பிற்பகல் 2.59 மணிக்கு மீஞ்சூருக்கும், கடற்கரையிலருந்து பிற்பகல் 12.40 மணிக்கு பொன்னேரிக்கும், பொன்னேரியிலிருந்து பிற்பகல் 3.33 மணிக்கு சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.