இன்று ஆடி அமாவாசை: கன்னியாகுமரியில் எஸ்.பி. ஆய்வு
ஆடி அமாவாசை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடுவாா்கள் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தென்மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். மேலும், கடற்கரையில் அமைந்துள்ள பரசுராம விநாயகா் கோயில், பகவதியம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபடுவா்.
இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கடல் சங்கமம் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டாா். அவருடன், கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸாா் உடன் சென்றனா்.