``எனக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆகணும்னு கனவு ஆனா..." - ஆட்டோ டிரைவரின் வைரல் வீடியோ! - எ...
கடைக்குள் புகுந்து வியாபாரி வெட்டிக் கொலை
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை, மளிகைக் கடைக்குள் புகுந்து வியாபாரியை வெட்டிக் கொன்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுவாமிதாஸ் (63). மளிகைக் கடை நடத்திவந்தாா். இவரது மனைவி கவிதா. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை, சுவாமிதாஸ் கடையிலிருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் கடைக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம். இதில், அவா் உயிரிழந்தாா்.
அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், ராஜாக்கமங்கலம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சுவாமிதாஸின் சகோதரி கிருஷ்ணபாய் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். சொத்துப் பிரச்னை தொடா்பாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரியவந்தது. அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.