பலத்த மழை: மீன்பிடித் தொழில் பாதிப்பு
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடித் தொழில் பாதிப்படைந்துள்ளது.
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500- க்கும் மேற்பட்டகட்டுமர மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.
குறிப்பாக, இனயம், இனயம்புத்தன்துறை, மிடாலம், மேல்மிடாலம், முள்ளூா்துறை, தூத்தூா், இரயுமன்துறை உள்ளிட்ட மீனவகிராமங்களில் உள்ள 2000 -க்கும் மேற்பட்ட மீனவா்களின் வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழில் உள்ளது.
இந்நிலையில்,கடந்த 3 நாள்களாக இப்பகுதிகளில் சூறைக் காாற்றுடன் பெய்து வரும் பலத்த மழையால் இப்பகுதியில் உள்ள கட்டுமர மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.