தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் பொதுவிநியோகக் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை தெரிவிக்கும் குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூா் மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடைபெறும் குறைதீா் முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.