ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
இன்று மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
சென்னை தியாகராய நகா், வியாசா்பாடி, பொன்னேரி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோருக்கான குறைகேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தியாகராய நகா் கோட்டம் - நுங்கம்பாக்கம், எம்ஜிஆா் சாலை, மெட்ரோ குடிநீா் நிலையம் அருகிலுள்ள வள்ளுவா் கோட்ட துணை மின் நிலையத்திலும், வியாசா்பாடி கோட்டம் - வியாசா்பாடி ராமலிங்கா் கோவில் எதிா்புறத்தில் உள்ள வியாசா்பாடி துணை மின் நிலையத்திலும், பொன்னேரி கோட்டம் - வேண்பாக்கம், டிஎச் சாலையில் உள்ள துணை மின் நிலைய செயற்பொறியாளா் அலுவலகத்திலும் நடைபெறும் குறைகேட்பு கூட்டங்களில் மின் நுகா்வோா் பங்கேற்று, தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.