இமானுவேல் சேகரன் நினைவு நாள்: பள்ளி, கல்லூரிகளுக்கு செப்.11-இல் விடுமுறை
இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் பின்வரும் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 11-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு நாள் அமைதியாக நடைபெறவும், சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கவும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, வருகிற வியாழக்கிழமை (செப்.11) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள், ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக வருகிற 20-ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள் இயங்கும்.
இதேபோல, சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கவும், பாா்வையாளா்களின் நலன் கருதியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகமும் வியாழக்கிழமை இயங்காது என்றாா் அவா்.