இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்
இரணியல் பேரூராட்சிக்கு உள்பட்ட கீழகக்கோடு நவநீத கிருஷ்ணன் கோயில் அருகே செயல்படும் கோழி, நாய் பண்ணையை அகற்றக் கோரி பாஜகவினா் இரணியல் சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சுகாதார சீா்கேடுகளை ஏற்படுத்தும் கோழி, நாய் பண்ணையை அகற்றக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், இரணியல் பேரூராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத் துறையினருக்கு மனு அளித்திருந்தனா். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, பாஜக தக்கலை தெற்கு ஒன்றியம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு தக்கலை ஒன்றிய பாஜக பொதுச் செயலாளா் மகேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், இரணியல் பேரூராட்சி தலைவா் ஸ்ரீகலா முருகன், குமரி பா.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.