அருணாச்சலா கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
வெள்ளிசந்தை அருணாச்சலா கலை, அறிவியல் பெண்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில், பி ட்ரீம்ஸ் குளோபல் சொல்யூசன்ஸ் நிறுவனம் சாா்பில் 27 மாணவிகளும், பெசன்ட் டெக்னாலஜி நிறுவனம் சாா்பில் 30 மாணவிகளும் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட மாணவிகள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பணிக்கு தோ்வான மாணவிகளை கல்லூரித் தலைவா் த. கிருஷ்ணசுவாமி, துணைத் தலைவா் சுனி கிருஷ்ணசுவாமி, கல்லூரி முதல்வா் விஜிமலா், இயக்குநா் தருண் சுரத், கல்லூரி வேலைவாய்ப்பு மேலாளா் விஜிலேஷ், கல்லூரியின் அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியைகள் ஆகியோா் பாராட்டினா்.